மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வெகுவாக வரவேற்கும் பயணிகள்!
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையின் மூலம் தற்போது தினந்தோறும் சராசரியாக 2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த மாதம் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக பெட்டிகளை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாகவே சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும். ஒரு மகளிர் பெட்டியும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அந்தப் பெட்டிகளுடன் சேர்த்து மேலும் இரண்டு பெட்டிகளை இணைக்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவிற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதனால் விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஆறு பெட்டிகள் வரை பயன்படுத்த முடியும் என்று மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது மட்டுமின்றி மதுரை,கோவையை அடுத்து தற்போது சேலம்,திருச்சி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.