அரசியலில் கொடிகட்டி பறந்தாலும் தயாரிப்பாளர்களுக்காக எம்ஜிஆர் செய்த தியாகம் – வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார்.
எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். இதன் பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நடிக்க நடித்த அவர் தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும்போது நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார்.
நடிகர் எம்ஜிஆர் தன் தயாரிப்பாளர் ஒருவர் கூட எந்த பிரச்சினையிலும் சிக்கக்கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதை மனதில் வைத்துக்கொண்டு வெறும் 18 நாட்களில் எம்ஜிஆர் படம் நடித்து கொடுத்தார்.
பிரபல இயக்குனரான ப. நீலகண்டன் எம்.ஜி.ஆரை வைத்து 17 படங்களை இயக்கி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த படங்கள் 136, அதில் நடிகை ஜெயலலிதா 28 படங்களும், சரோஜா தேவியோடு 26 படங்களும் ஆகும்.
1947 வெளிவந்த இப்படம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையே மாற்றியது. நடிகராக மட்டுமல்லாமல் பன்முகம் கொண்டவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தன்னுடைய ஒரு படத்தின் படப்பிடிப்பை 18 நாட்களில் முடித்து விட்டார்.பின்னர் வெளியான அப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
1966ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘முகராசி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இப்படத்தினை சின்னப்ப தேவர் தயாரித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார், ஜெயலலிதா, ஜெயந்தி, ஜெமினி கணேசன் நடித்தனர். இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுத, கே.வி.மகாதேவன் இசையமைத்தார். அந்தக் காலக்கட்டத்தில் எம்ஜிஆர் அரசியலில் கொடிக்கட்டி பறந்த சமயம். இருந்தாலும், தன்னால் தயாரிப்பாளர் நஷ்டமாகக்கூடாது என்பதற்காக 18 நாட்களில் ஷூட்டிங் முடித்து கொடுத்தார். ‘முகராசி’ படம் வெளியாகி 100 நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டடித்தது.