இந்த மாதத்தில் வரும் மீலாது நபி- தேதியை அறிவித்த தலைமை காஜி

0
113
Representative purpose only

மீலாது நபி என்னும் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான நாளாகும்.

அதாவது இஸ்லாமியர்களின் படி அல்லாஹ்வின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் வருகிறது அந்த நாள் தான் இஸ்லாமியர்களால் மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது.

முகம்மது நபி கிபி 570ல் சவூதி அரேபியாவில் மெக்கா நகரில் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை அப்துல்லாஹ், தாய் ஆமீனா. தன்னுடைய சிறய வயதிலேயே பெற்றோர்களை இழந்த நபி அவர்கள், அவருடைய சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்தார்.

தானுடைய 40 வயதில் நபித்துவம் பெட்ரா இவர், அரேபிய தீபகற்பம் முழுவதும் இஸ்லாம் என்ற ஒரே மதத்தின் கீழ் மக்கள் அனைவரையும் கொண்டு வந்தார்.

இஸ்லாமியர்கள் நபி அவர்களை கடவுளால் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என்று நம்புகின்றனர். மேலும் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் நபி அவர்கள் இறைத்தூதர் என நம்பப்படுகிறார்.

முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி இஸ்லாமியர்களின் சந்திர நாட்காட்டியின் மூன்றாம் மாதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நபி அவர்கள் கருணையே வடிவமாக திகழ்ந்ததினால் இந்த நாள் ஈகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்திற்கான மீலாது நபி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் கூறியிருப்பதாவது,

 

“இஸ்லாமிய ஆண்டான ஹிஜிரி 1443-ம் ஆண்டின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தின் பிறை நேற்று (7-ந்தேதி) தெரிந்தது. எனவே வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மீலாதுநபி விழா கொண்டாடப்படும்.”

எனவே வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி, ஈகை திருநாளான மீலாது நபி கொண்டாடப்பட உள்ளது.