அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

0
160
#image_title

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

90 காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.1982 ஆம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கினார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர் நடித்துள்ளார் ரஜினி,விஜய்,அஜித்,கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார்.இவர் நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டு விலகிய மீனா கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத மீனா நிலை குலைந்து துக்கத்தில் இருந்தார்.பல மாதங்களுக்கு பிறகு தன்னை தேற்றி கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்.இதன் தொடர்ச்சியாக தற்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் மீனா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.இது குறித்து அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் “மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.மீனா நடிக்க உள்ள புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜெய ஜோஸ் ராஜ் இயக்க இருக்கிறார்.மீனாவின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleநாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!
Next articleஎம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!