கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Photo of author

By Parthipan K

கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Parthipan K

Mineral smuggling, excitement

கனிமவள கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி! 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் குழித்துறை மார்த்தாண்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவருக்கு தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

திரவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விளம்பர ஆட்சி நடத்திவருவதாக கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் எந்த திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி,மு.கவின் சொத்து பட்டியல் விவகாரத்தில் நீதிமன்ற தீர்பே இறுதியானது என்று கூறினார். குற்றம் நிரூபிக்கபட்டால் கடும் நடவடிக்கை தேவை என்று கூறினார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் குமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து கனிமவள கடத்தல் நடைபெறுவதாகக் கூறிய இன்றைய ஆட்சியாளர்கள் வழக்கு தொடுத்தனர். ஆனால் தற்பொழுது கண்டும் காணாமல் இருப்பது கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருகிறதா? என்ற கேள்வி எழுகிறது என்று தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளதாக தெரிவித்தார்.