வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

0
194

சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் லெட்டர் பேட் மூலம் தகவல் ஒன்று பரவி வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் கையொப்பமிட்ட அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பெறுநர் :
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை 600009.

அன்புடையீர்,

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரம், எண் 24ல் வசிக்கும் திருவாளர் எஸ் சாந்தி என்பவருக்கு, TN34 AJ 4567 என்ற ஃபேன்சி எண்ணை வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி” என்று கையொப்பம் இடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக விண்ணப்பத்தில் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப கடிதம் உண்மையா பொய்யா என்று தகவல் எதுவும் தெரியவில்லை ஆனால் சமூக வலைதளங்களில் இந்த விண்ணப்ப படிவம் குறித்து பலரும் விவாதம் செய்து வருகின்றனர்.

மேலும், திமுக கட்சியினர் இது பொய்யான ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட விண்ணப்பம் என்று கூறி வந்தபோதிலும் சமூக வலைதளங்களில் அமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த விண்ணப்பம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தரும் வரை இது குறித்த வதந்திகள் இணையத்தில் விவாதமாக நடந்துகொண்டுதான் இருக்கும் என்று தெரிகிறது.

Previous articleகலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!
Next articleஇன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here