இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
206

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து ரூ.100.23-க்கும் , அதேபோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.95.59-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ 100.49 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 95.93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Previous articleவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!
Next articleபோதையில் இந்து கடவுள்களை சேதம் செய்த இளைஞர்கள்.!! கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here