அமைச்சரின் கார் மோதியதில் விபத்து! பெண் கவலைக்கிடம்

Photo of author

By Parthipan K

அமைச்சரின் கார் மோதியதில்  விபத்து! பெண் கவலைக்கிடம்!

கடலூர் கடை வீதி தெருவில் நேற்று இரவு திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்து, சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வாகனம் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

நெல்லிகுப்பம் அடுத்த காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்ற அமைச்சர் க.பொன்முடியின் பயணித்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடுவீரப்பட்டியைச் சேர்ந்த ஜோதி உள்ளிட்ட இருவர் பலத்த படுகாயம் அடைந்தார், மேலும் காயமடைந்த இருவரும் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் அழைத்துச் சென்று கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜோதி வயது (50) என்ற தொழிலாளி பெண் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், அமைச்சரின் கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து நெல்லிகுப்பம் பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.