போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! வந்த வழியே யூடன் அடித்த அமைச்சர்!

Photo of author

By Sakthi

தூத்துக்குடியில் முதலமைச்சர் வரும் சமயத்தில் மக்கள் சாலை மறியலில் இறங்க தயாரானதும் அமைச்சர் கீதா ஜீவன் கார் மூலமாக அந்த வழியாகவே யூடன் அடித்து திரும்பிய காணொளி வைரலாகி வருகிறது.

தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களை மழை வெகுவாக பாதித்து இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழை பொதுமக்களை படாத பாடு படுத்தியது.

இதனை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடியில் முகாமிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்காக அந்த கட்சியினர் காத்திருந்தார்கள்.

ஆனால் முதலமைச்சரின் தூத்துக்குடி நிகழ்வின்போது அமைச்சர் கீதாஜீவன் வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக சென்ற சமயத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று தற்சமயம் வீடியோ வாசி இணையத்தை பரபரப்பாக்கி வருகிறது.

அமைச்சர் கீதாஜீவன் நேற்று வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்காக வருகை தந்திருக்கிறார். அதேநேரம் முதலமைச்சர் வருகையை அறிந்த முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், உள்ளிட்ட தூத்துக்குடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கி இருந்து இருக்கிறது என சொல்கிறார்கள்.

எத்தனையோ முறை எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் நேரடியாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த சாலையில் அமைச்சர் கீதா ஜீவன் வருகை தந்திருக்கிறார்.

திருச்செந்தூர் சாலையில் சிவந்தாகுளம் என்ற பகுதியில் பல தினங்களாக தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கையே முன்னெடுக்கவில்லை அமைச்சர் கார் வருகையின் போது அங்கு பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்தப் போராட்டம் நடந்த பகுதியில் வந்த அமைச்சர் கார் சற்று தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் கார் வருகிறது அப்படியே அமருங்கள் என்று தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தார்கள். பொதுமக்களின் போராட்டம் நடைபெறுவதை அறிந்து தொலைவிலேயே நின்ற கார் சிறிது நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டு, அதன் பிறகு வந்த வழியே திரும்பிச் சென்றது. அமைச்சர் கீதாஜீவன் பின்னால் வந்த கார்களும் திரும்பிச் சென்றுவிட்டனர்.

இந்த வீடியோவை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். மக்கள் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமைச்சராக இருந்தும் கோரிக்கையை கேட்காமல் வந்த வழியே காருடன் கீதாஜீவன் சென்றது. உள்ளிட்டவற்றை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்களின் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வீறு நடை போட்டு வருகிறது.