பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

Photo of author

By Vijay

ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வான நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் போட்டியின்றி தேர்வானதையடுத்து கடந்த 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார்.

எல்.முருகனுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானதை அடுத்து பாரத பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளர் . இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு எல்.முருகன் பொன்னாடை போர்த்தியும், திருக்குறள் புத்தகத்தை வழங்கியுள்ளார்.