மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

0
155

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் ராஜபுரத்தில் ஆரம்ப பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் மக்கள் சபை கூட்டம் நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் 100 இடங்கள் நகராட்சி மற்றும் 50 பேரூராட்சிகள் என்று ஒட்டு மொத்தமாக 150 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை வாங்கும் மக்கள் சபை கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளாக நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 6 வார்டுகளில் மட்டுமே இருந்து சுமார் 3833 மனுக்கள் தரப்பட்டிருக்கின்றன.

இன்று நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் முதியோர் உதவித்தொகை விடுபட்டவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இங்கே தங்க நகை செய்யக்கூடியவர்கள் மற்றும் நலச்சங்கங்கள் பல கோரிக்கைகளை வைத்து வைத்திருக்கின்றன இதற்கும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பான கேள்விக்கு பதில் தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் மின்சாரத்துறையில்56 ஆயிரம் காலி இடங்கள் உள்ளனர். அதேபோல 50 சதவீத மின் கணக்கீட்டாளர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. மாதாந்திர மின் கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மின்சார வாரியம் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. மாதாந்திர மின் கணக்கீடு என்பது தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலில் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் ஆட்சி அமைந்த ஐந்து மாதங்களில் சுமார் 202 நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதேபோல படிப்படியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு வாக்குறுதி முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் வாக்களிக்காதவர்கள் வருத்தப்பட வேண்டும், அந்த அளவிற்கு ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். அதன்படி 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதியாக எண்ணி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த விதத்தில் கோவை மாவட்டத்தில் பல சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறியிருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறாமல் இருக்கின்றன. அதில் பல்வேறு பணிகள் மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சியின் எல்லா துறையை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு மாநகராட்சிக்கு என்ன தேவை இருக்கிறதோ அதனை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருந்தார் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Previous articleவரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleBREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!