அமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!

0
104

தேர்தலில் வியப்பூட்டும் பல நிகழ்வுகள் நடந்தாலும் அமைச்சர் ஒருவரின் மகள் மழை குரலில் தனது தந்தைக்காக அடுக்கடுக்கான வசனங்கள் பேசி வாக்கு சேகரித்தது பார்ப்போரை ரசிக்க வைத்தது.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் அரசுக்கு மத்திய அரசுடன் கூட்டணி அமைக்க, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டுமென்ற குறிக்கோளுடன் வியூகம் அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கு அதிமுகவோ பிரபலங்களையும், நட்சத்திர பேசாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது.

சினிமா பிரலங்கள், அனுபவம் மிக்க பேச்சாளர்கள் என தேர்தல் திருவிழா கலைக்கட்ட தொடங்கியுள்ள இந்த சூழலில் 10 வயதே நிரம்பாத அமைச்சரின் இளைய மகள் தனது மழலை குரலில் சிறிதும் பிசறு இல்லாமல் அடுக்கடுக்கான வசனம் பேசி தனது தந்தைக்கு வாக்கு சேகரித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார். விந்தியாவுடன் திறந்த வெளி வாகனத்தில் வந்த விஜயபாஸ்கரின் 2வது மகள், தனது அப்பாவுக்காக பேசி வாக்களிக்கும்படி கேட்டு கொண்டார்.

விஜயபாஸ்கரின் மகள், “பொதுமக்களுக்காக அப்பா உழைக்கிறார். உங்களுக்கு காதுகேக்கவில்லை என்றால் காது கேட்கும் மெஷினாகவும், கண்ணு தெரியவில்லை என்றால் கண்ணாடியாகவும், கொரோனா என்றால் மாத்திரை மருந்தாகவும், பொங்கல் என்றால் சீரும் சிறப்புமாக வருவார். ஒரு சான்ஸ் கொடுத்தீர்கள் காவிரி நீர் தந்தார். இன்னொரு சான்ஸ் கொடுத்தீர்களே ஆனால் காவிரி ஆறே தருவார். சுஜீத் தம்பியை காப்பாற்ற போராடிய எங்கள் அப்பா தீபாவளி, பொங்கலுக்கு கூட வீட்டுக்கு வராமல் மக்களுக்காக பாடு பட்டாரு. அவருக்காக இரட்டை இலைக்கு ஒட்டுப்போடுங்க. நம்ம சின்னம் இரட்டை இலை…” என வாக்கு சேகரித்தார்.