விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்

0
232
Ministers, sacked
Ministers, sacked

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்!

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது, சில ஊழல் புகார்கள்,  பொது இடங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற பல்வேறு விசயங்களில் தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.

மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது,

மேலும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோரின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்படும் அமைச்சர்களுக்கு பதிலாக நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகன் எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா, சங்கரன்கோவில் தனி தொகுதி எம்.எல்.ஏவான ராஜா, ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் நிதியமைச்சர் பதவி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தரப்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் சில இலாகக்கள் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleதமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?
Next articleதி கேரளா ஸ்டோரி படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை! எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்!!