“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!

0
138
#image_title

“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!

நம் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா இலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து,கொழுப்பு,கார்போஹைடிரேட்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது.இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.இந்த புதினா இலையை வைத்து சுவையான புதினா சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*புதினா இலைகள் – 2 கப்

*பச்சை மிளகாய் – 3

*சின்ன வெங்காயம் – 1/4 கப்

*முந்திரி – 8

*சீரகம் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி

*வேர்க்கடலை – 2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*வடித்த சாதம் – 1 பவுல்

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி சீரகம்,3 பச்சை மிளகாய்,8 முந்திரி,தேவையான அளவு உப்பு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அவை சூடேறியதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் 1/4 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி உளுந்து,1/2 தேக்கரண்டி கடலை பருப்பு,2 தேக்கரண்டி வேர்க்கடலை,1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள புதினா விழுதை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.பின்னர் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.தேவைப்பட்டால் மல்லி இலைகளை தூவலாம்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

Previous articleதேங்காய் – மாங்காய் துவையல் – சுவையாக செய்வது எப்படி?
Next articleஉடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!