இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!!

Photo of author

By Amutha

இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!!

ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து ரசிகர்களின் கட்டணத்தை திருப்பி வழங்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான இவர் ஆஸ்கார் விருதை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுத் தந்தவர். இவரது இசைக்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அந்த அளவு  பட்டித் தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

ரகுமான் எப்போதும் இசைக்கலைஞர்களை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். கடந்த சில வருடங்களாக எதுவும் நடத்தாத நிலையில் இந்த வருடம் நடத்த திட்டமிட்டு சென்னை அருகே உள்ள பனையூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடந்த 10-ஆம் தேதி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான இசைபிரியர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு செல்லும்போது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவால் ரசிகர்கள் பலர் இடம் கிடைக்காமல், அந்த இடத்திற்கு செல்ல முடியாமலும் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

25 ஆயிரம் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டிய நிகழ்வில் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டதோடு அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவால் ரசிகர்கள் பெரிதும் அவதிப்பட்டதை  சமூக வலைத்தளங்களில் அதிருப்தியாக பதிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் ரகுமான் மீதும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் ரகுமானுக்கு ஆதரவாக பல்வேறு திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை எடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனம் சமூக வலைதளத்தில் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியது.

ரகுமான் இதுகுறித்து அளித்த பேட்டியில், இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்கொண்டு சரி செய்வோம். ஏனெனில் எந்த ஒரு ஆத்மாவும் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்து இருந்தார். எனவே இசை நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் பங்குபெறாத ரசிகர்களுக்கு கட்டணத்தை திருப்பி தரும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் சுமார் 4000 பேர் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் டிக்கெட்டின் நகலை சரிபார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.

இது பற்றி அதன் நிறுவனர் கூறுகையில்,

நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு ரகுமான் காரணம் இல்லை. எனவே அவரைப் பற்றி தவறாக பதிவிட வேண்டாம். ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது ரஹ்மான் சாரின் பொறுப்பு. அதை அவர் சிறப்பாக செய்தார்.

கூட்ட நெரிசல், போலி டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் இந்த குளறுபடிகளுக்கு காரணம், அதற்காக மன்னிப்பு கேட்கிறோம், நிகழ்ச்சியில் பதிவு செய்து கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கண்டிப்பாக பணம் திருப்பி அனுப்பப்படும் அதற்கான மெயிலும்  கொடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.