ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு 12 வயது குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சி ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்திற்கு சென்று அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த அவர் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர், அவரது கணவர் பதினெட்டாம் தேதி அவரை அழைக்க வந்த பொழுது சுபஸ்ரீ காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விசாரணையின் அவர் அன்று காலை 9 மணி அளவில் யோகா மையத்தை விட்டு வெளியே சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் என்ன ஆனார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் செம்மேடு அருகே உள்ள சிசிடிவி காட்சி ஒன்றின் சுபஸ்ரீ ஓடி செல்லும் காட்சிகளை கண்டறிந்தனர். சுபஸ்ரீ கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் செம்மேடு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் தொழிலாளர் அந்த இடத்திற்கு சென்று அந்த சடலத்தை மீட்டனர். அந்த சடலம் மாயமான சுபஸ்ரீ என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இரண்டு 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் நுரையீரலில் இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடலில் எந்தவித காயங்களும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தினரும் ஒப்படைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண்