குடும்ப தகராற்றில் கொலை செய்யப்பட்ட பெண்.. தலைமறைவாகிய திமுக ஒன்றிய செயலாளரின் மகனுக்கு வலைவீச்சு..!

0
126

 

திருவள்ளூர் மாவட்டம் கண்டிகை பேரு கிராமத்தை சேர்ந்தவர் திராவிட பாலு திமுக உறுப்பினரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவருக்கு சத்தியவேலு என்ற சகோதரர் உள்ளார் சத்திய வேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறார். இனி சகோதரர்களின் குடும்பத்திற்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரு குடும்பங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சத்திய வேலுவின் மகன் விஷால் திராவிடபாலுவின்ன் மனைவி செல்வி மகன் முருகன் மருமகளுடன் ரம்யா பேரன் கருணாநிதி ஆகியோரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக இருந்த விஷாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.