‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
179
#image_title

‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரு தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. அதன் பின்னர் இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருந்த நிலையில் நேற்று(வியாழன்) புயலாக வலுப்பெற்றது.

“மிதிலி” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் இன்று வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையைக் கடந்தது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த கனமழையானது வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவையின் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால் கடலூா் மற்றும் புதுவை துறைமுகத்தில் நேற்று 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

Previous articleஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!
Next articleபிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!