வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

Photo of author

By Parthipan K

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இவர் இணைந்த பிறகு அதிருப்தியில் உள்ள திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது வி.பி.துரைசாமியும் அவ்வேறே நடக்கும் கூறியிருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர் இதனால் கு.க செல்வம் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது,அதற்கு மறுப்பு தெரிவித்த அனிதா ராதாகிருஷ்ணன் நான் திமுகவின் விசுவாசமிக்க தொண்டன், அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து நாளிதழ் ஒன்றில், பொதுசெயலாளர் பதவி கிடைக்காதால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார் என்பது போன்ற செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
அதில், நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும் கட்சியின் அடிப்பட்ட தொண்டனாக இருந்து இருவண்ண கொடியை பிடித்து கொண்டு கழகத்திற்கு கோஷமிட்டே இருப்பேன்,சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் எனவே தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேற்றய தினத்தில் திமுகவின் எம்.பியான ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த ஜெகத்ரட்சகன் நான் தலைமையின் மீதி அதிருப்தியிலும் இல்லை, பிரதமரை சென்று சந்திக்கவும் இல்லை. இந்த விசயத்தில் தொடர்ந்து என் மீது சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செய்திகளை பரப்பி கொண்டிருப்பவர்களுக்கு
எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று கூறினார் இதுபோன்று திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் என்னுடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் முதல் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி க்கள் பலரும் தொடர்பில் உள்ளதாகவும்,திமுக தலைமையே அதிர்ச்சி அடையும் வகையில் இவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று வி.பி.துரைசாமி கூறியிருப்பது திமுகவின் தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.