ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

Photo of author

By Vijay

ஹூட் செயலியில் இணைந்த தமிழக முதல்வர் அவர்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் தேதி தாதா சாகிப் பால்கே விருது பெற்று பின் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, சௌந்தர்யா ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஹூட் செயலி குறித்து முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், ஹூட் செயலியில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இணைந்துள்ளார். இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஹூட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின் தொடரலாம்” என பதிவிட்டுள்ளார்.