தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

0
195

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும், மரபும் இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்துக் கூறுகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்லவும், அறியாமை எனும் நிலையிலிருந்து விலகி மேலான அறிவை எய்தவும் மனச்சோர்வில் இருந்து விடுபட்டு பேரின்பத்தை பெறவும் இந்த நாள் நமக்கு ஊக்கம் அளிக்கிறது.

இதனால் நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும் தோழமை உணர்வையும் வலுப்பெற செய்வதுடன் சமுதாய தொண்டும் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்திருநாள் ஒளிரச் செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Previous articleஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!
Next articleவிஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here