12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

Photo of author

By Jayachithra

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது.

உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி அளித்து உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்பு குழு ஒப்புதல் அளித்து இருக்கின்றது.

இது குறித்து ஐரோப்பிய மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசி 18வயது மேலானவர்களுக்கு போடப்படும். ஆனால், தற்போது 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கும் போட அனுமதி அளிக்கப்பட்ட இருக்கின்றது. அத்துடன் 12 முதல் 17 வயதில் ஆனால் 3,732 குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..

இந்த ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது இருந்த அதே அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடமும் காணப்பட்டதாக ஆய்வில் தெரியவந்து இருக்கின்றது’. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.