நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் என்பதை தங்களது சித்தாந்தமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றது.

ஆனால் இன்றைக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான திருட்டு சம்பவம் என்பது இன்றைக்கு ஏடிம் கார்டுகளை தவறாக பயன்படுத்தியோ அல்லது ஒருவருடைய வங்கி கணக்கின் தகவல்களை தெரிந்து கொண்டு அவருடைய பணத்தை திருடுதல் என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது‌. இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட செய்தி யாதெனின் இனி வங்கிகளால் வெளியிடக்கூடிய ஏடிம் கார்டுகளை ஏடிம் இயந்திரங்களிலும் ஸ்வைப் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக ஏடிம் கார்டுகளின் பின் உள்ள CCV எண்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய இயலாது என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நடைமுறை மார்ச் 16 உடன் நடைமுறைக்கு வருகிறது.

Leave a Comment