கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22 ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து விழிப்புணர்வு நடவடிக்கை பற்றியும் நாட்டு மக்களிடம் மோடி நேற்று உரையாற்றினார்.
கொரோனா வைரஸை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். தங்களை முடிந்தவரை தனிமையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வருகின்ற 22 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அவசிய மற்றும் அத்தியாவசிய வேலையில் ஈடுபடுவோரை தவிர்த்து மற்ற எவரும் வெளியில் வர வேண்டாம். அன்றைய தினம் கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்ட தினமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறியவை :
- மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினருக்கு தொந்தரவு தர வேண்டாம்.
- 22 ஆம் தேதி அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோருக்கு வீட்டு வாயிலில் நின்று நன்றி தெரிவிக்க வேண்டும்
- மருத்துவர்களுக்கு உங்களின் கைதட்டல் மூலம் நன்றியை தெரிவியுங்கள், கொரோனா வைரஸை தடுத்து நம் வலிமையை நிரூபிப்போம்.
- பொருளாதார மந்த நிலையை போக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- வேலை இல்லாத காரணத்தால் ஏழைகள்
பாதிக்கப்பட கூடாது. கொரோனா அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். - பொது மக்களுக்காக அவர்களே கூறும் ஊரடங்கு உத்தரவாகும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்து பேருக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.
- வேலை இல்லாத நாள்களில் பணியாளர்களின் சம்பளத்தை நிறுவனங்கள் பிடிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் கூறியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் கடவுளுக்கு கரோனோ வைரஸ் இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்யுமாறு அம்மாநில முதலவர் கூறியதால், ஜகன்னாத் என்ற கோயிலில் சாமி சிலைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.