Breaking News

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.இந்நிலையில் வீட்டில் இருந்த இரண்டு லட்சம் பணம் ,இரண்டு பவுன் நகை ,மளிகை பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment