டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

0
142

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது இந்திய அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டு இந்திய அணி அதிகளவில் டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தொடர்ச்சியாக 10 தொடர்களை வென்று ரோஹித் ஷர்மா தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார். இது இதுவரை இந்திய கேப்டன் யாரும் செய்யாத சாதனை. அதுபோல டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரராகவும் ரோஹித் ஷர்மா இருந்து வருகிறார்.

இந்நிலையில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இரண்டு மோசமான சாதனைகளையும் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். டி 20 போட்டிகளில் அவரின் 10 ஆவது டக் அவுட் இதுவாகும். இந்திய வீரர்களிலேயே அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதுபோல கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் நான்காவது டக் அவுட் இதுவாகும். கேப்டனாகவும் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.