இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு!
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது தான் குறைந்துள்ளது.அத்தொற்று முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து இதர நாடுகளில் குரங்கு அம்மை ருத்ரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.
இத்தொற்றானது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியது. பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் மனிதர்கள் பழகுவதால் அதிலிருந்து இந்த தொற்று உருவாகுகிறது. இது சின்னமையின் வழிவகை என்றும் கூறுகின்றனர். இதுவரை இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் மூன்று பேருக்கு உறுதியான நிலையில் ,டெல்லியில் மேலும்ஒருவருக்குஉறுதியாகியுள்ளது.இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் டெல்லியில் தொற்று உறுதியானவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர். அவ்வாறு இருந்த போதே இவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த 40 வயதுமிக்க ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 23 வயதுமிக்க இளைஞர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்றும் முடிவு வரவில்லை.
அதற்குள்ளேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருக்கு இந்த குரங்கு அம்மை தவிர்த்து வேறு எந்த உடல் உபாதைகளும் காணப்படவில்லை.அதனால் இவருக்கு அளித்த சிகிச்சையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கண்டறிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சகம் உயர்மட்ட விசாரணை செய்வதாக கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய அரசு, பரவலின் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி. கே பால் தலைமையில் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர்.மேலும் லண்டன் உலக சுகாதார அமைப்பானது குரங்கு அம்மை பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.