துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

0
127
#image_title

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாத தொடக்கத்தில் துவங்கியது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிய காரணத்தினால் தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தொடர் கனமழை எதிரொலியால் ஆறு, ஏரி, குளம். ஆணை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் இந்த கனமழையானது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

அதன்படி மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மறுநாள் ஞாயிறு முதல் புதன் கிழமை வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Previous article5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!
Next articleஇன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!