இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

0
138
#image_title

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

மகளிர் உரிமைத் தொகை இன்று(நவம்பர்10) மாலைக்குள் அனைவருடயை வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணபித்தவர்களில் ஒரு. சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன்படி இதில் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று(நவம்பர்10) நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்ட உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தகுதியான ஒரு சில மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்பொழுது பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(நவம்பர்10) மாலைக்குள் தகுதியான அனைத்து மகளிர் வங்கி கணக்குகளிலும் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க சொன்னார்கள். எனக்கு தொண்டை வலியும் காய்ச்சலும் உள்ளது. ஆனால் தொண்டை வலியை விட தொண்டுதான் எனக்கு முக்கியம். அதனால் நான் வந்துவிட்டேன்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு உரிமை தொகை திட்டம் அறிவித்தோம். ஆனால் ஒரு சிலர் இந்த திட்டத்தை திமுக கட்சி செயல்படுத்தாது. திமுக கட்சி ஆட்சிக்கு வராது என்று சிலர் கூறினார்கள். ஆனால் தேர்தலில் எங்களை வெற்றி பெறவைத்து எங்களை ஆட்சிக்கு வரவைத்தீர்கள். உங்களின் ஆணைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கூறினால் கூறியதை செய்வேன்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான உரிமைத் தொகை 1.6 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்10) மாலைக்குள் தகுதியான தேர்வு செய்யப்பட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வந்து சேரும்.

இது உதவித் தொகை அல்ல. உரிமைத் தொகை என்பதை மறந்து விடாதீர்கள். தேவையும் தகுதியும் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த உரிமைத் தொகை செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

தகுதியும் தேவையும் உள்ள மகளிருக்கு உரிமைத் தொகையாக நாங்கள் இதை வழங்கி வருகின்றோம். ஆனால் இதை தேர்தல் வாக்குறுதிக்கு முரண் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தகுதியான 2.48 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத் தொகை மணி ஆர்டர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7.35 லட்சம் மகளிர் இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளாக சேர்ந்துள்ளனர். மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படாத பெண்களுக்கு காரணத்தை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

இது ஊர் கூடி இழுத்த இழுக்கும் தேர் ஆகும். ஊருக்காக உங்களுக்காக திராவிட மாடல் உருவாக்கிய தேர். இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இமாலய வெற்றி பெற உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.