தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!
தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது.
தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகின்றது.மேலும், இந்த மருத்துவ முகாம்களும் தற்போது நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த முகாமானது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறும் என்றும்,மருத்துவ குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த உள்ளதாகவும் . பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே இந்த மருத்துவ முகாம்களை சரியாக பயன்படுத்தி டெங்குக் காய்ச்சலிருந்து தற்காத்து கொள்ளுங்கள்.