அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?
அதிகாலையில் நாம் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ( morning exercise benefits in tamil ) ஏற்படுகின்றன. தினம் காலையில் பூங்காவில் நடப்பது, யோகா செய்வது, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வது, ஆசனங்கள் செய்வது, நடனம் போன்ற ஏதோ ஒரு வழியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

இதன்மூலம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டி உங்களை விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் வைக்கிறது. அதிகாலை பயிற்சி உங்கள் மேற்புற தோல் மற்றும் முகத்தையும் அழகாக காட்டுகிறது. தொடர்ந்து காலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடல் எடையை சீராக வைத்து நோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

இரவு நேரத்தில் நல்ல தூக்கமும், நல்ல உணவு பழக்கமும் காலை பயிற்சியால் உண்டாகிறது.உள்ளுறுப்புகளின் இயல்பு தன்மை அதிகமாகிறது. அதிக கொழுப்புகளை இயற்கையான முறையில் கரைக்கவும் காலை பயிற்சி பெரும் உதவியாக உள்ளது. மற்ற நேரங்களை விட காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சியால் அதிக நன்மை ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நோய் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் தேவையற்ற உடல் உபாதை, கெட்ட நீர் போன்றவை வெளியேற்றப்பட்டு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் தனது வேலைகளில் மிக ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக உடற்பயிற்சியில் கைதேர்ந்தவர்கள் கூறுகிறார். காலையில் பயிற்சி செய்யுங்கள் கவலை இல்லாமல் வாழுங்கள்.