கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!

Photo of author

By Parthipan K

கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!

Parthipan K

Mother drowned in front of her husband and son!!

கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதர்படுகை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி காந்திமதி இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.இவரது பெயர் ராசுகுட்டி இவர்கள்  குண்டலப்பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சிறிய நாட்டுப் படையின் மூலம் ஆற்றைக்கடக்க முயற்சித்தனர். அப்போது திடீரென்று வெள்ளப்பெருக்கு அதிகமானது. படகு ஆற்றில் தலைகீழாக கவர்ந்தது.

இதில் மூவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.அப்போது ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரைத்தப்பினர்.ஆனால் அவரது மனைவி  காந்திமதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனால் சிகிச்சை பலனின்றி காந்திமதி உயிரிழந்தார். இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.