உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

0
134

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 50 ஆவது நாளில் வெற்றிகரமாக நடைபோடுகிறது.

கடந்த ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மாநிலங்கள் (பாலிவுட் தவிர்த்து) மற்றும் இந்தியாவுக்கு வெளியேயும் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் நகர்ப் பகுதிகளில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் சில திரைகளில் விக்ரம் திரைப்படம் ஓடிவருகிறது. இன்று 50 ஆவது நாள் என்ற சாதனையைப் படைக்கும் விக்ரம் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட திரைகளில் ஓடிவருகிறது. சமீபகாலமாக எந்தவொரு தமிழ்ப்படமும் படைக்காத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.