Mounjaro | தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் இந்தியர்கள் அதிகமாக பாதித்து வருகின்றன. இப்போதெல்லாம் சிறிய வயதினருக்கே சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தான், இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில், உலகப்புகழ் பெற்ற மருந்து இந்திய சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மவுஞ்சாரோ என்ற மருந்து தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை Eli Lilly என்ற நிறுவனம் தான் களமிறக்கியுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. மேலும், முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்புக்கான மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டுமென Eli Lilly நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மவுஞ்சாரோ மருந்தை உடல் பருமன் உள்ளவர்களும், 2ஆம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் ஊசி வடிவில் உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து உணவுக்கான ஆர்வத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும். மேலும், உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்த மருந்தின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், மவுஞ்சாரோவின் 5 மி.கி குப்பியின் விலை 4,375 ரூபாய் என்றூம் 2.5 மி.கி குப்பியின் விலை 3,500 ரூபாய் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.ஆனால், இதன் விலை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மருந்து இந்தியாவில் ஏற்கனவே கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்அனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், தற்போது Eli Lilly நிறுவனம் நேரடியாகவே களமிறங்கியுள்ளது.