நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி?
மாம்பழம் என்று பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதா? பின்னே இருக்காதா என்ன… நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடம் பிடிக்கும். இதன் சுவையான எல்லோரும் அடிமையாகிவிடுவார்கள். மேலும் மாம்பழம் சுவைக்கு புகழ் பெற்றது மட்டுமல்ல, அதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள்தான்.
இத்தனை ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. மேலும், அதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகமாக இருக்கிறது.
மேலும், மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன.
சரி எப்படி மாம்பழ பாயாசம் செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
மாம்பழ விழுது – 2 கப்
மாம்பழ துண்டுகள் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 லிட்டர்
நெய் – சிறிதளவு
முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா – தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் மாம்பழ விழுதினை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
நன்கு காய்ச்சிய பாலை நெய்யில் வதக்கிய மாம்பழத்துடன் சேர்க்க வேண்டும்.
மாம்பழம் பாலுடன் சேர்ந்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின்னர், அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
சர்க்கரை கலந்து பாயாசமாக கெட்டியானதும், வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை, பாதாம் , பிஸ்தாவை அதில் சேர்க்க வேண்டும்.
பின்னர், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சு
வையான மாம்பழ பாயாசம் ரெடி.