இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க

0
527
Mouth Smell bad breath causes treatment in home Tamil
Mouth Smell bad breath causes treatment in home Tamil

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன.?

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் பகல் நேரங்களில் வாயில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு  காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். நாம் தினமும் என்ன தான் நன்றாக பல்லை தேய்த்து துலக்கினாலும் பலருக்கும் வாயில் இருந்து நாற்றம் வருவதை கவனித்திருப்பீர்கள்.

குறிப்பாக அவர்களுக்கு வயிற்று புண் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். ஆல்கஹால் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கும் துர்நாற்றம் ஏற்படும். குறிப்பாக இப்படி வரும் வாய் துர்நாற்றத்தை எப்படி தடுப்பது என்று தெரிந்து கொள்வோம்.

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்:

வயிற்றில் புண் இருப்பது வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. வயிற்றிலுள்ள அமிலம் உணவு குழாய்க்கு சென்றடைவதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது. இதனாலேயும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இவ்வாறு உணவுப்பழக்கம் மட்டுமின்றி மது,ஆல்கஹால் அருந்துவது மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்சனைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது.

வாய் துர்நாற்றம் வராமல் தடுப்பது எப்படி.?

இவ்வாறு ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்க முதலில் பல்லை சுத்தமாக துலக்க வேண்டும். மேலும் தினமும் நாக்கில் இருக்கும் அழுகுக்குகளை சுத்த படுத்த வேண்டும். நாக்கில் இருக்கும் கிருமிகள் மூலமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் கழித்து தூங்க வேண்டும்.

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் சுலபமாக செரிக்க கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு உள்ளிட்ட காரமான உணவுகள் வாய் துர்நாற்றத்திற்கு சுலபமாக வழி வகுக்கும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

வாய் துர்நாற்றம் போக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் வாயை சுத்தம் செய்கிறது. இதனால் வாய் துர்நாற்றத்தை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

அடுத்ததாக இந்த வாய் துர்நாற்றம் வரமால் இருப்பதற்கு மது மற்றும் புகை பிடிக்காமல் இருக்க வேண்டும்.

வாய் துர்நாற்றம் வராமல் தடுக்க நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பு சோம்பு சிறிதளவு சாப்பிட்டால் இந்த வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிடுவதாலும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

உங்களுக்கு ஏற்ற நேரத்தில் சிறிதளவு துளசி சாப்பிட்டாலும் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

Previous articleஉங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!
Next articleஇந்த ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்!