எச்சில் ஊறவைக்கும் மீன் குழம்பு!! கம கமனு வீடே மணக்கும் படி செய்வது எப்படி?

0
114
#image_title

எச்சில் ஊறவைக்கும் மீன் குழம்பு!! கம கமனு வீடே மணக்கும் படி செய்வது எப்படி?

நாம் விரும்பி உண்ணும் மற்ற இறைச்சிகளை விட மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற அசைவத்தில் ஒன்றாக மீன் இருக்கிறது.மீனில் அதிகளவு ஒமேகா 3 இருப்பதினால் இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று.

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த மீனில் சுவையாக குழம்பு செய்ய வேண்டுமென்று ஆசையா?அப்போ இந்த செய்முறையை பாலோ செய்து பாருங்கள் குழம்பின் சுவையைக் கண்டு நிச்சயம் அசந்துடுவீங்க.

தேவையான பொருட்கள்:

*மீன் – 1/2 கிலோ

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*புளி – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)

*மல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*இஞ்சி,பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*தேங்காய் – 1/4 கப் (அரைத்தது)

*கருவேப்பிலை – 1 கொத்து

*வெந்தயம் – சிறிதளவு

* சீரகம் – சிறிதளவு

*தக்காளி – 1 (நறுக்கியது)

செய்முறை:-

1.ஒரு பவுலில் தேவையான அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

2.அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.

3.பின்னர் கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து அதோடு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

4.பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

5.அதையடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

6.அதோடு அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

7.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

8.இறுதியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.பின்னர் 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

Previous articleஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!
Next article6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?