கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

0
91

பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு துணை நின்றவர் கேபி முனுசாமி. அதன்பிறகு சசிகலாவிற்கு எதிராக தன்னுடைய குரலை எப்போதுமே எழுப்பி வருகின்றார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்தது முதல் கட்சியில் எவ்வாறு வெளிச்சத்திற்கு வருவது என்பதில் தான் கவனம் செலுத்தி வந்தார் கேபி முனுசாமி..

இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறி விட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் இறங்கியிருக்கிறார் கேபி முனுசாமி கேபி முனுசாமி தற்சமயம் சட்டமன்ற கொரடா பதவியை அவர் குறிவைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சசிகலாவின் அதிமுகவிற்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி மறைமுகமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகியது. ஆடியோவில் அவர் பேசியதை உறுதிப்படுத்தும் விதமாக தான் இது இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இதை மிகக் கடுமையாக எதிர்த்த கேபி முனுசாமி சசிகலா பேச்சு அதிமுகவின் தொண்டர்களுடன் நடைபெறவில்லை. அது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உடன் நடைபெற்ற பேச்சு என்று தெரிவித்திருக்கிறார். அதோடு எந்த அதிமுகவின் தொண்டனும் சசிகலாவின் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். அவர் இவ்வாறு உரையாற்றுவது சட்டமன்ற கொறடா பதவியை தன் வசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று சொல்லப்படுகிறது.