கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!

0
243
#image_title

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!

நடப்பு ஐபிஎல் தொடர் நாளை(மார்ச்22) தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் புதிய கேப்டன் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கின்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணிகளை வழிநடத்தும் கேப்டன் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்தது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியா செயல்படுவார் என்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழி நடத்துவார் என்றும் அறிவிப்பு வெளியானது.

மேலும் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு திரும்பிய ஹார்திக் பாண்டியா அவர்களுக்கு பதிலாக குஜராத் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் அணிக்கு எம்எஸ் தோனி அவர்களே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்தது. ஆனால் தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

மேலும் ஐபிஎல் கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாளை(மார்ச்22) தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. இந்த போட்டி நாளை(மார்ச்22) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Previous articleBIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Next articleஉங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!