உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

0
23
#image_title

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

நம்முடைய அனைவருடைய கால்களிலும் இருந்தும் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை தான் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகும். அதாவது கால்களில் இருந்து வியர்வை வரும் பொழுது நாம் செருப்பு அல்லது ஷூ அணிந்திருப்போம். இதனால் வியர்வை வெளியேறாமல் இருக்கும். மேலும் கால்களுக்கு காற்று கிடைக்காமல் பாதங்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இந்த ஈரத்தன்மையால் நம்முடைய பாதங்களில் அழுக்கு படிந்து விடும். இதனால் சிறிது நேரத்தில் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும். இதை சரி செய்வதற்கான மருந்தை தயார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* எலுமிச்சை சாறு
* எலுமிச்சை கிராஸ் எண்ணெய்
* கடலை மாவு
* பேக்கிங் சோடா

செய்முறை…

முதலில் ஒரு பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு மற்றும் எலுமிச்சை கிராஸ் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை சில நிமிடங்கள் குளிர்சாதனப் பொட்டியில் வைக்க வேண்டும்.

இதை கால்களுக்கு பயன்படுத்தும் முன்னர். உங்களுடைய கால்களை நன்றாக கழுவிக் கொண்டு உலர வைக்க வேண்டும். பாதங்கள் காய்ந்த பின்னர் இந்த கலவையை எடுத்து உங்களுடைய பாதங்கள் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு மெதுவாக மசாஜ் செய்து இதை எடுக்க வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கால்களில் இருந்து வரும் துர்நாற்றம் வராது.