இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்!

0
175

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்!

இன்று: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்களை பாராட்டும் புதுவிதமான செயல்பாடுகள் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு நபர் தனது கடைகளுக்கு வரும் பெண்களுக்கு இன்று தேனீர் இலவசம் என்று அறிவித்து தூள் கிளப்பியுள்ளார்.

பெண்களை பெருமைபடுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக சேவகர்களும் மகளிர்தின வாழ்த்துக்களை கூறி இன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக மாற்றி வருகின்றனர். இதை மேலும் மகிழ்விக்கும்படி மும்பையைச் சேர்ந்த தேனீர் கடை நடத்தி வரும் மனோஜ் தாக்கூர் என்பவர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கா அற்புதமான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

தனது கடைக்கு பின்னே அனைவருக்கும் தெரியும் வகையில் மகளிர் தின வாழ்த்துகள் பேனரை அச்சடித்து வைத்துள்ளார். அதில் இன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை பெண்களுக்கு இலவசமாக தேனீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மனோஜ் தாக்கூர் கூறுகையில்;

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேனீர் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு பெண்கள் அதிகம் வருகிறார்கள், இன்றைய மகளிர் தினத்தில் பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இலவச தேனீர் அறிவிப்பு வெளியிட்டேன். நமது பாரத பிரதமரும் டீ விற்றவர்தான் அவரால் நான் ஈர்க்கப்பட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Previous articleவெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!
Next articleசாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..?