மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது பாராமெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆய்வகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்கள் அந்த சிகிச்சை முடிந்த பின் கழிவுகளாக மாறிவிடுகின்றன. இந்த நிலையில் அந்த கழிவுகளை அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தான் அகற்றி வருகின்றது.
ஆனால் தற்பொழுது அந்த நடைமுறை மாறி தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மருத்துவ கழிவுகளை தினந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் எடுப்பதற்காக வருகின்றனர்.
அதுவும் 2000 ரூபாய் முதல் 2800 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். எனவே மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நகராட்சி நிர்வாகமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டால் ரூபாய் 750 அடிப்படை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி பாராமெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் கோவை செஞ்சிடவே சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தலைமை ஏற்று கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்பொழுது சிறு அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன.
அவற்றில் உள்ள பிரச்சனைகள் என்ன இதற்கு அரசு என்ன தீர்வு காண வேண்டும் இந்த ஆய்வகங்களின் பங்கு என்ன இதன் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயனடைகின்றனர் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உடனடியாக தமிழ்நாடு அரசு சிறு ஆய்வாளங்களில் உள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தார்.