குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!

0
120
#image_title

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் வின்ச்சியா கிராமத்தில், ஹேமுபாய், ஹன்சாபென் எனும் தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதிகள், தலைவெட்டும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தயாரித்த அந்த இயந்திரத்தில் அவர்களுது தலையை, அவர்களே விட்டு வெட்டிக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜ்கோட் காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் இந்திரஜித்சின் மற்றும் காவலர் ஜாடஜே, விசாரணை செய்துள்ளனர்.

இந்த இயந்திரத்தை பற்றி இறந்த தம்பதிகளே கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். தலை வெட்டும் இயந்திரத்தின் மேல் கையிறு ஒன்று இருக்கும், அதை இழுத்தால் அதற்கு மேல் உள்ள கத்தி தலையை துண்டாக வெட்டி விடும். என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த, சம்பவம் குறித்து விசாரணை செய்த காவலர்கள் கூறியது: சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதிகள், அவர்களது குடிசையில் பூஜைகள் நடத்தி வந்துள்ளனர், கண்டு பிடித்த இயந்திரத்தின் முன் நெருப்பை மூட்டி தலை வெட்டிய பின் அதில் விழும்படி செட் செய்துள்ளனர்.

இவர்களின் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, இப்படி செய்தால் அதித சக்கி கிடைக்கும். என்ற மூடநம்பிக்கையில், இவ்வாறு செய்துள்ளனர்.

சடலங்ககளை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக குஜராத் அரசு மருத்துமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

இதை யாரும் பின்பற்ற வேண்டாம் எனவும் துணை ஆய்வாளர் இந்திரஜித்சின் கேட்டுக்கொண்டார்.

author avatar
Jayachithra