அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

0
114
#image_title

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

முருங்கை மரத்தின் இலை,வேர்,பூ,காய்,பட்டை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை பூவானது நீரிழவு நோய்,கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*முருங்கைப்பூ – 1 கப்

*முட்டை – 3

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 1(நறுக்கியது)

*வர மிளகாய் – 1

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கை பூவை போட்டு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 முறை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பெரிய வெங்காயம் எடுத்து தோல் நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.அதேபோல் பச்சை மிளகாயை சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும்.அடுத்து வர மிளகாய் ஒன்று மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து வதக்கவும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து முட்டையை உடைத்து ஊற்றவும்.பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைப் பூ சேர்த்து கிளறி விடவும்.பிறகு மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து வதக்கி 2 நிமிடம் வரை வேக விடவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.இறுதியாக 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.முட்டை பிடிக்காதவர்கள் துருவிய தேங்காய் சேர்த்து செய்யலாம்.