மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !
ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கை பொதுஜன பேரமுலா கட்சியின் மக்களவை உறுப்பினராக இலங்கையில் ரத்னபுற மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.பிரேமலால் ஜெயசேகரா என்பவர். இவரை அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தொண்டர்கள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் கடந்த ஜூலை 31 அன்று மரண தண்டனையளித்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை தண்டனை பெறுவதற்கு முன்னரே அவர் தாக்கல் செய்திருந்ததால் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதியை மறுத்தனர்.
அதனை எதிர்த்து பிரேமலால் ஜெயசேதார நீதிமன்றத்தை நாடினார்.இவருக்கு பதவியேற்க அனுமதி அளிக்க நீதிமன்றம், நாடாளுமன்றம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற துண்டை தோளில் அணிந்துகொண்டு அவர்களது எதிர்ப்புகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தனர். பதவி ஏற்றுக்கொண்ட பிரேமலால் ஜெயசேகரா அவை நடவடிக்கைகள் முடிந்ததும் மீண்டும் சிறைக்கு சென்றார்.
அவர் தான் செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனையை அனுபவிப்பதாக கூறினர்.