சர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!

Photo of author

By Jayachithra

இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பலருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று கூறி வருகிறார்கள். மேலும், சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டாலும் மருத்துவர் சொன்ன உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. அதில் 2045 ஆம் ஆண்டு 20 நபர்களில் 10 பேருக்காவது சர்க்கரை நோயானது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நோயில் இருந்து விடுபடுவதற்கு உணவு வகைகள் மூலமாக மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு முறையை எவ்வாறு கையாள்வது மற்றும் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலை நேரத்தில் காளான் ஊத்தப்பம் செய்து சாப்பிடுவதன் மூலமாக சர்க்கரை நோயை எளிதில் அவர்களை விட்டு நீங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ள காளான் ஊத்தப்பம் எவ்வாறு செய்வது? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

காளான்
குடைமிளகாய்
தோசை மாவு
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
உப்பு
கரம் மசாலா
எண்ணெய்

செய்முறை :

கடாயில் முதலில் எண்ணெயை ஊற்றி பின் கடுகு மற்றும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதன் பின் குடைமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். பின் இதனுடன் நறுக்கிய காளானை சேர்த்து லேசாக கிளறி, பச்சை வாடை அடங்கியதும் நாம் ரெடி செய்த மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மேலும், காளான் முழுவதுமாக வெந்துவிடக்கூடாது.

அதன் பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய மசாலாவை வைத்து, மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைத்து பிறகு, மீண்டும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். அதன்பின் அட்டகாசமான காளான் வீட்டிலேயே ரெடி. சர்க்கரை நோயாளிகளுக்கு இதை செய்து கொடுத்தால் இதில் உள்ள சத்துக்களால், எளிதில் சர்க்கரை நோயாளிகள் அதிலிருந்து மீளலாம். இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லதாகும்.