முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! 

Photo of author

By Vijay

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! 

Vijay

Muslims are mostly using condoms. Controversy sparked by Owaisi's speech...!!!

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

ஹைதராபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று மறைமுகமாக பேசியதாக குற்றம் சாட்டிய ஓவைசி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “முஸ்லீம்கள் அதிக  குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறி ஏன் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்? முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்து தான் காணப்படுகிறது. இதை நான் சொல்லவில்லை. மோடி அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தகவல் தான் தெரிவிக்கிறது.

முஸ்லிம்கள் தான் அதிகளவில் ஆணுறைகளை பயன்படுத்துகிறார்கள். இதை வெளியே சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. முஸ்லிம்கள் சமூகம் பெரும்பான்மை ஆகிவிடும் என்று இந்துக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கிறார். இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படி முஸ்லிம்கள் குறித்த தேவையில்லாத அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த போகிறீர்கள்??

நாங்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களா இருக்கலாம். ஆனால் எங்கள் நாடு இதுதான். பிரதமர் மோடியின் கேரண்டி ஒன்றே ஒன்று தான். தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை வெறுப்பது தான் அவரின் கேரண்டி” என மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். ஆணுறை குறித்து மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.