கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக்.
தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு தெருவில் கார்த்திக் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த இளைஞனைப் பார்த்ததும் இவர்தான் நம் படத்திற்கு ஹீரோ என்று முடிவு செய்தார்.
அந்த இளைஞனை பற்றி விசாரிக்கும்போது, அவர் நடிகர் முத்துராமனின் மகன் என்பது தெரியவந்தது. உடனே, நடிகர் முத்துராமனை சந்தித்து அப்படத்தின் கதையை சொன்னார். நடிகர் முத்துராமனுக்கும் அக்கதை பிடித்துப்போக, மகனை நடிக்க வைக்க சம்மதித்துள்ளார்.
இதனையடுத்து, நடிகர் கார்த்திக் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். நவரச நாயகன் என்ற பெயரிலும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
‘மௌனராகம்’ படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்று வந்தது.
ஆண்கள் ரசிகர்களை விட இவருக்கு பெண்கள் ரசிகை கூட்டம் தான் அதிகமாக இருந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்திலும் காமெடி கலந்த காதல் கதைகளில் நடிக்க துவங்கினார். மகன் ஹீரோவான பிறகு நடிகர் கார்த்திக் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
கார்த்திக் முதன் முதலாக நடித்த அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாவதற்கு முன்பே முத்துராமன் இறந்து விட்டார். தான் நடித்த முதல் படத்தை பார்க்காமலேயே அப்பா இறந்த துக்கம் இன்று வரைக்கும் அவர் மனதில் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிறதாம்.