ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!!

0
23
#image_title

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!!

2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆசிய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் பிரிவில் 10000 மீட்டருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆடவர் பிரிவில் 10000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹ்ரைனை சேர்ந்த பிர்ஹானு அவர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த கார்த்திக் குமார் 10000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், குல்வீர் சிங் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில் ஒரே போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் என்று இரண்டு பதக்கங்களை வென்றதை அடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் 7வது நாளான இன்று(செப்டம்பர்30) வரை 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தம் 38 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகளின் பிக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் சீனா 111 தங்கப் பதக்கங்கள் உள்பட 210 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் இருக்கின்றது. ஜப்பான் இரண்டாவது இடத்திலும், தென்கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.