இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய காரணம் என்ன தெரியுமா?

0
172
Rajinikanth Felicitates Writer Kalaignanam
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய காரணம் என்ன தெரியுமா?
உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.
உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் தயாரித்துள்ளார். அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கலந்துகொள்ளுமாறு இயக்குநர் சங்கர் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது இது குறித்து நடிகர். ரஜினிகாந்த் அவர்கள் “இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இந்நிலையில் நான் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களை பற்றி எதையாவது பேசுவேன். அதை பற்றி ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டு கிண்டலாக கமெண்ட் செய்தால் அது எனக்கு சங்கடமாக மாறும். கமல்ஹாசன் அவர்களுக்கும் அது சங்கடம். எனவே நான் வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.
இதையடுத்து இயக்குநர் சங்கர் அவர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களை இசை வெளியீட்டு விழாவுக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி அவர்கள் தோனி எண்டெர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்னர் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக ஒரு திரைப்படம் ஒன்றையும் தயாரித்தார். இதனால் எம்.எஸ் தோனி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.